கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் புகைப் பிடிப்பதாலும், உள்ளூர் மக்கள் அறியாமையில் தீ வைப்பதாலும் காட்டு தீ அதிக அளவில் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனால், பெரும்பள்ளம் பகுதிகளில் வனத்துறையினர் வனத்துறையினர் வைத்துள்ள எச்சரிக்கை பலகைகளில், “வனப்பகுதியில் தீ வைப்பவர்களுக்கு சிறை தண்டனை கொடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் மும்மலைப் பகுதி, தீயினால் அதிக அளவு பாதிப்படையும் பகுதியாகவும், மூலிகை வளங்களும், சோலைகளும் நிறைந்த கீழ் மலைப்பகுதியாக உள்ளதால், பெரும்பள்ளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எச்சரிக்கை பதாகைகள் வைத்து வனத்துறையால் தொடர் பரப்புரை செய்யப்பட்டுவருகிறது.
கீழ்மலைப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே நின்று புகை பிடிப்பதாலும், உள்ளுர் மக்கள் அறியாமையால் தீ வைப்பதாலும் ஏற்படும் தீயானது சோலை வனப்பெருக்கத்தை முற்றிலும் தடுத்து, வன விலங்குகள் பெருக்கத்தையும், நீர் ஆதாரத்தை குறைப்பதாகவும், இந்த செயலுக்கு கடும் சிறை தண்டனை கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கிராமம் கிராமமாக வனத்துறையினர் சென்று பரப்புரை செய்தும் வருகின்றனர்.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!