[X] Close

சாலை, வீடுகளில் தேங்கும் தண்ணீர் - என்ன காரணம் ? யார் பொறுப்பு?

சிறப்புக் களம்

what-are-the-problems-behind-water-logging-in-chennai

ஒரே இரவில் பெய்த பெருமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி குளம்போல காட்சியளித்தது. இதற்கு என்ன காரணம்? யார் பொறுப்பு என்பது குறித்து பார்ப்போம்.

தென்மேற்கு பருவமழை காலத்திலேயே இயல்பை விட 17 சதவிகிதம் அதிக மழையை தமிழகம் பெற்றது. இதில் அதிக மழை சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் பதிவாகி இருந்தது. குறிப்பாக தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்து பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பின.

இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் மாவட்டங்களின் மழை நிலவரத்தை பொறுத்தவரையில் அக்டோபர் 29ஆம் தேதி நாகையில் 12 சென்டிமீட்டர் மழை பதிவானது. அக் 30-ல் ஸ்ரீ வைகுண்டத்தில் 18 சென்டிமீட்டர் மழையும், நவம்பர் 1ல் கொத்தவாச்சேரியில் 15 சென்டிமீட்டர் மழையும் பதிவானது.


Advertisement

Tamil Nadu rain: Three dead, downpour likely to continue in parts of state till November 12

நவம்பர் 2ல் மரக்காணத்தில் 20 சென்டி மீட்டர் மழையும் பதிவானது. வடகிழக்கு பருவமழையில் அதிகபட்ச மழைப்பதிவாக இது கருதப்பட்டது. நவம்பர் 3ல் பேராவூரணியில் 17 சென்டி மீட்டர் நவம்பர் 4ல் சேரன்மாதேவியில் 13 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி இருந்தது. நவம்பர் 5ல் கோபிசெட்டிபாளையத்தில் 11 சென்டிமீட்டர் நவம்பர் 6ஆம் தேதி குறிஞ்சிப்பாடியில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. இந்த 10 நாட்களில் பல பாதிப்புகள் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவை நீர்நிலைகள் நிரம்பி வழிந்து உபரிநீர் ஊருக்குள் புகுவது பல இடங்களில் நடந்துள்ளது. பலம் குறைந்த ஏரிகளில் கரைகள் உடைந்து ஊருக்குள் நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வயல்களில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் மூழ்கி வீணாகும் நிலை ஏற்பட்டது. தொடர் மழையால் கிராமங்களில் வீடுகளில் விரிசல் ஏற்படுவதும், சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்த சம்பவங்களும் நிகழ்ந்தன

இந்த பிரச்னைகள் குறித்து ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி திருநாவுக்கரசு பேசுகையில், ''வட சென்னையை எடுத்துக்கொள்வோம். அங்குள்ள வடிகாலை பார்த்தால் சாலையின் விரிவாக்கத்திற்காக வடிகாலை சுருக்கிவிட்டார்கள். இதை என்னால் உறுதியாக கூற முடியும். தண்ணீர் செல்லும் அளவிற்கு வடிகால்கள் இல்ல. இந்த வடிவமைப்பில் பல கோளாறுகள் உள்ளன. வட சென்னையில் உள்ள ஏரிகளின் தண்ணீர் பெரிய வடிகாலுக்கு செல்லும். அது பங்கிங்கால் கால்வாய்க்கு சென்று கடலுக்கு செல்லும். இப்படித்தான் அமைப்பு இருந்தது. வடிகால்கள் தற்போது சுருங்கிப்போனது மிகப்பெரிய பிரச்னை. ஏரிகள் காணாமல் போன இடம் வடசென்னை.

A general view of flooded Marina beach is pictured during a rain shower in Chennai on Nov 7. AFP Photo

அயனாபுரம் ஏரி எங்கே? பெரம்பூர் சித்தேரி எங்கே? மேடவாக்கம் ஏரி என ஏரிகள் காணாமல் சென்றுவிட்டன. ஏரியில் தங்க வேண்டிய தண்ணீர் வெளியில் வருவதுதான் பிரச்னை. வீட்டிற்குள் தண்ணீர் செல்வதற்கு முக்கிய காரணம் சென்னை மாநகராட்சி. சாலைகளை பெயர்த்துவிட்டு அமைப்பதற்கு பதிலாக ஆண்டுக்கு ஒரு லேயர் சேர்த்துக்கொண்டே செல்கிறார்கள். இதனால் சாலையின் மட்டம் மேலாகவும், வீட்டின் மட்டம் சாலைக்கு சம்மாக அல்லது அதைவிட குறைவாக இருக்கிறது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் செல்கிறது. இதை சரிசெய்யவேண்டும்'' என்றார்.

ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் (குத்தம்பாக்கம்) இளங்கோ பேசுகையில், ''ஊரக பகுதிகளில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் மழைநீர் தேக்கம் பெரிய அளவில் இருக்காது. ஏரிகள் நிறைந்து ஏரிகள் நிரம்பி வழிந்து சாலைகளில் வெள்ளம் வர வாய்ப்பிருக்கிறது. சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் வேண்டுமானால் வெள்ளம் வர வாய்ப்பிருக்கிறது.

கிராமங்கள் நகரங்களாக பரிணமிக்கும்போது அங்கு நிலம் வாங்கி குடிபெயரும்போது வடிகால்களுக்கான எந்தவித அனுமதியும் முறையாக வழங்கப்படுவதில்லை. கிராமங்கள் நகரங்களாக மாறும்போது இயற்கையான வடிகால் முறைகள் தடைபட்டுவிடுகின்றன. இது முக்கியமான ஆபத்து. மழை வடிய சரியான திட்டமிடல்கள் இல்லை. ஒவ்வொரு முறை வெள்ளம் வரும்போது பேசுகிறார்கள். இதையடுத்து அதை மறந்துவிடுகிறார்கள். மக்களுக்கு இது தொடர்பான பொறுப்பு இருக்கிறது. சாலை அமைக்கும்போது சாலையை பெயர்த்துவிட்டு அமைக்க சொல்லி மக்கள் வற்புறுத்தவேண்டும்'' என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close