13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட்

13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட்
13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட்

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, கரூர், திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த இடங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு கனமழை காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ’மாலை 5.30 மணி வரையில், இன்று  புதுவையில் 7 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் புதுவையில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எதிர்பா ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுகிறது. போலவே செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com