Published : 08,Nov 2021 03:09 PM
அருண் விஜய் படத்தில் 'தாய் மண்ணே’ பாடலைப் பாடிய தெருக்குரல் அறிவு

நடிகர் அருண் விஜய்யின் ‘பார்டர்’ படத்தில் பாடல் பாடியுள்ளார் ’தெருக்குரல்’ அறிவு.
கடந்த 2017 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் அடித்த ‘குற்றம் 23’ படத்தின் இயக்குநர் அறிவழகனுடன் மீண்டும் அருண் விஜய் ‘பார்டர்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ’மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் ‘அக்னி சிறகுகள்’, ஹரியுடன் ‘யானை’ படங்களிலும் அருண் விஜய் நடித்து வருகிறார்.
இதில், ‘பார்டர்’ விரைவில் திரைக்கு வரவுள்ளது. அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா நடித்துள்ளார். சாம் சி .எஸ் இசையமைத்துள்ளார். ஸ்பை-த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பாடகர் ’தெருக்குரல்’ அறிவு இணைந்திருக்கிறார். ’தாய்மண்ணே’ என்ற தேசபக்தி பாடலையும் உணர்வுப்பூர்வமுடன் பாடியிருக்கிறார்.
இதனை, ‘தெருக்குரல்’ அறிவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உற்சாகமுடன் தெரிவித்திருக்கிறார் படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்