தேவையில்லாமல் பேசினால் 'உங்கள் நாக்கை அறுப்போம்' என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் பாஜக மாநில தலைவரை மிரட்டும் விதத்தில் பேசியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்,''தெலுங்கானா விவசாயிகளை நெல் பயிரிடச் சொல்லி அவர்களை ஏமாற்றி, விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதை பாஜக உறுதி செய்யும் என மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் தெரிவித்திருக்கிறார். இது முற்றிலும் பொய்யானது. மத்திய அரசு நெல்-ஐ வாங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளது.
அதனால்தான், விவசாயிகளின் நஷ்டத்தைத் தடுக்க வேறு பயிர்களை பயிரிடும் படி மத்திய அரசு பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறது. நான் மத்திய விவசாயத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து புழுங்கல் அரிடசியை கொள்முதல் செய்துகொள்ளுமாறு கோரினேன். விரைவில் தொடர்பு கொள்கிறேன் என்று கூறியவர் இதுவரை என்னை தொடர்பு கொள்ளவில்லை. 5 லட்சம் நெல் தற்போது மத்திய அரசால் வாங்கப்படாமல் இருக்கிறது.
ஏற்கெனவே மத்திய அரசு நெல்லை வாங்க மாட்டோம் என கூறியிருக்கிறது. ஆனால் மாநில பாஜக தலைவர் சஞ்சை விவசாயிகளிடம் நெல் பயிரிடுமாறும், அதை மத்திய அரசு வாங்கிக்கொள்ளும் எனவும் கூறி பொய்யை பரப்பி வருகிறார். இப்படி தேவையற்ற முறையில் பேசிக்கொண்டிருந்தால் உங்கள் நாக்கை அறுப்போம்'' என்று கூறியுள்ளார்.
மேலும், ''பா.ஜ.கவினர் காரை ஏற்றி விவசாயிகளை கொலை செய்கிறீர்கள். பா.ஜ.க முதல்வர் ஒருவர் விவசாயிகளை அடித்துக்கொல்லுமாறு கூறியிருக்கிறார். மூன்று வேளாண்சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். விவசாயிகளை காக்கும் கடமை எங்களுக்கு உள்ளது. எதிர்கட்சிகள் மலிவான அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். விவசாயிகளின் உணர்வுகளுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். தெலங்கானா ராஷ்டிரிய சமிதி விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தும்.
இந்தியாவின் ஜிடிபி பாகிஸ்தான், பங்களாதேஷை விட குறைவாக உள்ளது. ஆனால், மத்திய அரசு தேவையற்ற வரிகளை மக்கள் மீது சுமத்துகிறது. நீங்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சத்தை கொடுத்துவிட்டீர்களா? 2 கோடி வேலைவாய்ப்புகளை கொடுத்து உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா?'' என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!