இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,451 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
நாடு முழுவதும் வெகுவாக குறைந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் சற்று அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. மத்திய அரசின் இன்றைய புள்ளி விவரங்கள் படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,451 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை என்பது 3,43,66,987 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,204 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 3,37,63,104 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் இன்று மட்டும் 266 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 4,61,057 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் மட்டும் தற்பொழுது 1,42,826 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது 262 நாட்களில் குறைந்த எண்ணிக்கை ஆகும்.
தமிழை பயிற்றுமொழியாக்க இயலாது - மத்திய அரசு நீதிமன்றத்தில் வாதம்
மேலும் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.24 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.34 ஆகவும் உள்ளது. நேற்று மட்டும் ஒரேநாளில் 23,84,096 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தமாக 108,47,23,042 டோஸ்கள் இந்தியாவில் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Loading More post
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்