Published : 20,Aug 2017 08:56 AM
அமித்ஷா வரவேற்பு பேனர் அகற்றம்

சென்னை மெரீனா கடற்கரை சாலையில் வைக்கப்பட்டிருந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவுக்கான வரவேற்பு பேனரை காவல்துறையினர் அகற்றினர்.
சென்னை மெரீனா கடற்கரை சாலையில் வைக்கப்பட்டிருந்த அமித் ஷாவின் 50 அடி உயர பேனரால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மெரீனா காவல்துறையினர் அதனை அகற்றினர். மேலும், மாநகாட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று பேனர் வைத்துக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்திள்ளனர். வருகின்ற 22ஆம் தேதி அமித் ஷா சென்னை வரவுள்ளார்.