
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 850 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 958 பேர் நோய் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். ஆறு பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர்.
10,474 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் 27,09,080 இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் 129 பேர், கோவையில் 96 பேர், ஈரோட்டில் 69 பேர், திருப்பூரில் 62 பேர், சேலத்தில் 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை கே.கே. நகரில் மேலும் ஒரு தனியார் ஆய்வகத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.