Published : 20,Aug 2017 07:24 AM
கழிப்பறை இல்லாத வீடுகளின் மின்சாரம் கட்

ராஜஸ்தானில் 15 நாட்களில் கழிப்பறை கட்டாத வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மாவட்ட துணை கலெக்டர் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள கங்கிதலா கிராமத்தில் கழிவறை இல்லாத அனைத்து வீடுகளிலும் 15 நாட்களுக்குள் கழிப்பறை கட்டி பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்களது வீட்டில் உள்ள மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என துணை கலெக்டர் கர்தார் சிங் தெரிவித்துள்ளார். கிராமத்தில் 19 சதவீதத்தினர் மட்டுமே தங்கள் வீட்டில் கழிப்பறை கட்டியுள்ளனர். இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
முன்னதாக கங்கிதலா கிராமத்தில் திறந்தவெளி மலம் கழிப்பவர்களிடம் அபராதம் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.