கட்சியின் தலைமை முடிவெடுத்தால், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியிருக்கிறார்.
இந்தியாவின் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் மற்றும் முக்கிய அரசியல் கட்சிகள் கடும் போட்டிக்குத் தயாராகி வருகின்றன. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் தனது சாதனைகளை முன்வைத்து பிரசாரத்தை தொடங்கியிருக்கிறார்.
முதல்வர் யோகி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். அதில், ``கட்சித் தலைமை முடிவெடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன். எங்கள் கட்சி தலைமை என்னை எங்கு போட்டியிட சொல்கிறதோ அந்த இடத்திலிருந்து நான் போட்டியிடுவேன். கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற குழு உள்ளது, யார் எங்கிருந்து போட்டியிட வேண்டும் என்பதை அது தீர்மானிக்கிறது. அந்தக் குழுவின் முடிவின் அடிப்படையில் நான் போட்டியிடுவேன்" என்றுள்ளார்.
தொடர்ந்து பேசிய யோகி, "கடந்த தேர்தலின்போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்கள் சமூகத்தின் கடைசி மனிதனையும் சென்றடைந்துள்ளது. இதேபோல் சட்டம் - ஒழுங்கில் பிற மாநிலங்களுக்கு உத்தரப் பிரதேசம் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக எந்தக் கலவரமும் ஏற்படவில்லை, அதேபோல், தீபாவளி உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளும் அமைதியாக கொண்டாடப்பட்டது.
நல்ல சாலை இணைப்பு மற்றும் பாதுகாப்பு உத்தரவாதம் காரணமாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும் நாட்டிலேயே சிறந்த இடமாக உத்தரப் பிரதேசம் மாறியுள்ளது. முன்பு முதலீடுகள் மற்ற மாநிலங்களுக்குச் சென்றன. எனது ஆட்சிக் காலகட்டத்தில் சுமார் 4.5 லட்சம் பேர் வெளிப்படையான முறையில் வேலை பெற்றுள்ளனர்" என்று பேசினார்.
| வாசிக்க > இரு மாநில முதலமைச்சர்களை வாட்டும் தோல்வி - பின்தங்குகிறதா பா.ஜ.க? |
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை