[X] Close

டெல்லி: தீபாவளி முடிந்து 2 நாட்களாகியும் மோசமான அளவில் காற்று மாசு

இந்தியா

தீபாவளி பண்டிகை முடிந்து 2 நாட்களாகிய பின்னரும் டெல்லியில் காற்று மாசு மோசமான அளவிலேயே நீடிக்கிறது.

டெல்லியின் பல பகுதிகளில் காற்று மாசு குறியீடு 533 என்ற அபாய அளவில் இருப்பதாக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. புகைமூட்டம் நிலவுவதால் பலர் சுவாசிக்க சிரமப்பட்டதாகவும், சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியின் ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் வேளாண் கழிவுகளை எரிப்பதால் அவை காற்றில் கலந்து டெல்லி வான்வெளிக்கு வந்துவிடுகின்றன. இதோடு தடைகளை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதும் காற்றில் கலந்து மாசுக்களின் அளவை அதிகரித்துள்ளது.

பிலிகுண்டுலு காவிரியாற்றில் நீர்வரத்து 23,000 கனஅடியாக உயர்வு 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close