மதுபோதையில் வேறொருவரின் வீட்டிற்குள் நுழைந்த அதிமுக முன்னாள் எம்.பி

மதுபோதையில் வேறொருவரின் வீட்டிற்குள் நுழைந்த அதிமுக முன்னாள் எம்.பி
மதுபோதையில் வேறொருவரின் வீட்டிற்குள் நுழைந்த அதிமுக முன்னாள் எம்.பி

நீலகிரி அருகே மதுபோதையில் அதிமுக முன்னாள் எம்.பி, வேறொருவரின் வீட்டிற்குள் திடீரென நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக குன்னூர் போலீசார் கூறும்போது,  “ தீபாவளி தினத்தன்று அதிமுக முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், மது போதையில் இரவு 10 மணியளவில் முத்தாலம்மன் பேட்டை குடியிருப்பு பகுதியில் உள்ள கோபி (47) என்பவரது வீட்டிற்குள் திடீரென புகுந்து உள்ளார். முன்னாள் எம்.பி. புகுந்ததால் கோபமடைந்த கோபி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பெண்கள் உள்ள இடத்தில் நிர்வாணமாக வந்தது குறித்து கோபி பேசியபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபி முன்னாள் எம்.பி.யை தாக்கியுள்ளார். குன்னூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கோபாலகிருஷ்ணன் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இரு தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. முன்னாள் எம்பியை தாக்கியது தொடர்பாக கோபி கைது செய்யப்பட்டுள்ளார்" என போலீசார் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com