[X] Close

இந்தியாவில் ஒரே நாளில் 10,929 பேருக்கு கொரோனா: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

கொரோனா வைரஸ்

10929-tested-corona-positive-in-India

இந்தியாவில் ஒரேநாளில் 10,929 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் 12,885 ஆகவும், நேற்று 12,729 ஆகவும் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 10,929 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,43,33,754லிருந்து 3,43,44,683ஆக உயர்ந்திருக்கிறது

இந்தியாவில் ஒரே நாளில் 12,509 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,37,24,959லிருந்து 3,37,37,468 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.23 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.34 சதவீதமாகவும் உள்ளது.


Advertisement

image

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 392 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,59,873லிருந்து 4,60,265 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,46,950 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குடியிருப்பு அருகே பதுங்கியிருந்த 12அடி நீள மலைப்பாம்பு: லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள 


Advertisement

இந்தியாவில் இதுவரை 107.92 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் 20,75,942 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close