[X] Close

பெங்களூரு : வீட்டு வாடகைக்கு வைத்திருந்த பணத்தில் நகை வாங்கிய மனைவியை கொலை செய்த கணவர்

குற்றம்

A-husband-in-Bangalore-who-killed-his-wife-who-bought-imitation-jewelry-with-money-which-mean-to-pay-rent

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தயானந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் 40 வயதான ஷேக் ஃபாரூக். கடந்த திங்கள் அன்று காலம் அவரது மனைவி நசியாவிடம், வீட்டு வாடகை செலுத்துவதற்காக 6500 ரூபாய் பணத்தை கொடுதத்துள்ளார் அவர். ஆனால் நசியா அந்த பணத்தை கொண்டு கவரிங் நகைகளை வாங்கியுள்ளார். தீபாவளி வருவதால் அதனை அக்கம் பக்கத்தில் விற்பனை எது விடலாம் என அவர் அப்படி செய்துள்ளார். 

image

அன்று மாலை பணி முடிந்து வீடு திரும்பிய ஷேக், மனைவியிடம் வீட்டு வாடகை செலுத்தப்பட்டதா? என கேட்டுள்ளார். அப்போது நசியா தனது கவரிங் நகை பிசினஸ் குறித்து கணவனிடம் சொல்லியுள்ளார். 


Advertisement

அதனால் ஆத்திரமடைந்த ஷேக், மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் மனைவியின் கழுத்தை பிடித்து, அவரது தலையை சுவற்றில் பலமாக தாக்கியுள்ளார். அதன் காரணமாக சிறுது நேரத்தில் நசியா மயக்கம் அடைந்துள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். 

பின்னர் நசியாவின் தயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஷேக்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

வாடகை பணத்தில் நகை வாங்கிய மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படிக்கலாம் : 'ஆப்' இன்றி அமையா உலகு 8: 'IMPACT' - உங்கள் 'நடை'யை 'கொடை'யாக்கும் செயலி! 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close