கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் இரு டி.வி. நடிகர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
மும்பை கோரேகாவ், தீரஜ் ரெசிடன்சி பகுதியை சேர்ந்தவர் ககன்தீப் (38). இவர் இந்தி டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். இவர் நண்பர் அர்ஜித் (30). இவரும் டிவி நடிகர். இவர்கள் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட பின், உதவியாளருடன் மும்பை திரும்பினர். காரை நடிகர் ககன்தீப் ஓட்டி வந்தார். நேற்று மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் மனோர் அருகே கார் வந்துகொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென தறிகெட்டு ஓடியது. பின்னர் கன்டெய்னர் லாரியில் பயங்கரமாக மோதியது. இதில் கார் நொறுங்கியது. அதில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
விபத்து நடந்த காரில் மதுபாட்டில்கள் கிடந்ததால், குடிபோதையில் நடிகர் காரை ஓட்டினாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Loading More post
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்