[X] Close

7 குண்டுகளுடன் காரிலிருந்து காணாமல் போன கைதுப்பாக்கி: தீவிர விசாரணையில் போலீஸார்

தமிழ்நாடு

Chennai-A-handgun-found-in-a-car-with-7-grenades-was-reported-missing

மதுரவாயலில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் காரில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், சக்கரபாணி தெருவைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணா, பெட்ரோல் பங்க் டீலரான இவர், பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு தீபாவளி தினத்தில் இனிப்புகள் கொடுக்க சென்றபோது காரில் வைத்திருந்த கைத்துப்பாக்கி காணவில்லை என மதுரவாயல் போலீசில் புகார் அளித்துள்ளார்.

image


Advertisement

மேலும், அந்த கைத்துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பி வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து துப்பாக்கியை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சென்னையில் 7 குண்டுகளுடன் கைத்துப்பாக்கியை காணவில்லை என புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close