திருவாரூர்: பைக் மீது கார் மோதி விபத்து: போதையில் காரை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்

திருவாரூர்: பைக் மீது கார் மோதி விபத்து: போதையில் காரை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்
திருவாரூர்: பைக் மீது கார் மோதி விபத்து: போதையில் காரை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்

குடிபோதையில் இளைஞர்கள் காரை அடித்து உடைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைசேரி என்னுமிடத்தில் திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் நோக்கி கார் ஒன்று சென்றுள்ளது. அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் இரு இளைஞர்கள் வந்துள்ளார்கள். இருசக்கர வாகனமும் காரும் மோதிக் கொண்டதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவருக்கு காலில் அடிப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதில், அங்கிருந்த சிலர் குடிபோதையில் காரை அடித்து நொறுக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் அவ்வழியாக செல்ல முடியாமல் ஆம்புலன்ஸ் வாகனமும் சிறிது நேரம் சிக்கி தவித்தது. திருத்துறைப்பூண்டியில் நேற்று மட்டும் மது அருந்திவிட்டு வாகனம் விபத்தில் சிக்கி காயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com