Published : 04,Nov 2021 09:54 PM
அரியலூர்: விளையாடிக் கொண்டிருந்த போது குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டத்தில் தீபாவளியன்று இரண்டு குழந்தைகள் குளத்தில் மூழ்கி இறந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் மேலூரை சேர்ந்தவர்கள் ஹரினி(7), லோகேஷ் (6). இந்த இரண்டு குழந்தைகளும் தங்கள் பாட்டி தமிழரசி வீட்டுக்கு தீபாவளி பண்டிகையைக் கொண்டாட அருகே உள்ள மறுக்காலங்குறிச்சிக்கு சென்றிருக்கின்றனர். அப்போது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது குளத்தில் மூழ்கி இறந்தனர். பண்டிகையன்று குழந்தைகள் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேவர் ஜெயந்தி விழாவில் போலீஸ் வாகனத்தில் நடனமாடிய 5 இளைஞர்கள் கைது