Published : 03,Nov 2021 10:51 PM

வனவிலங்கு தாக்கி உயிரிழப்பு - நிவாரணத் தொகையை உயர்த்தியது தொடர்பான அரசாணை வெளியீடு!

Human-Wildlife-animal-conflict-TN-Government-raised-relief-amount-to-5-lakh-rupees-for-deceased-and-Permanently-incapacitation

மனித - வனவிலங்கு மோதல் தொடர்பான சிக்கலுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும். இதனை முறையான திட்டமிடல் மற்றும் அணுகுமுறையின் மூலமே தீர்வு காண முடியும். குறிப்பாக மனித - வனவிலங்கு மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுப்பதும் அவசியமாகும்.  

அதன்படி மனித - விலங்கு மோதல்களில் உயிர் இழப்பு மற்றும் நிரந்தரமாக உடல் ஊனம் அடைபவர்களுக்கு இழப்பீடாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் வாக்கில் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது அதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. 

இதன் மூலம் 4 லட்ச ரூபாயாக இருந்த இழப்பீட்டு தொகை 5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

இதையும் படிக்கலாம் : கிரிப்டோ கரன்சி? கணக்கு தொடங்குவது முதல் முதலீடு வரை! நிபுணரின் விளக்கம்! 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்