Published : 03,Nov 2021 03:01 PM

சிறுபான்மை ஆணையத்தில் மொழி சிறுபான்மையினருக்கும் பிரதிநிதித்துவம் - அரசாணை வெளியீடு

The-Government-of-Tamil-Nadu-Minority-Commission-has-been-amended-to-provide-for-the-representation-of-linguistic-minorities
தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தில் மொழி சிறுபான்மையினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தில் மத சிறுபான்மையினர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். இதில் மொழி சிறுபான்மையினரையும் உறுப்பினர்களாக்க வழிவகை செய்யும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆணையத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 9- ல் இருந்து 13 ஆக உயர்ந்துள்ளது. இதில் 9 பேர் மத சிறுபான்மையினராகவும், 4 பேர் மொழி சிறுபான்மையினராகவும் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதச் சிறுபான்மையினரில் ஒருவரும், மொழி சிறுபான்மையினரில் ஒருவரும் துணைத் தலைவர்களாக இருப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், சௌராஷ்டிரா, மராத்தி ஆகிய மொழிகள் பேசுவோர் மொழி சிறுபான்மையினராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்