”நான் வீடு கட்ட வைத்திருந்த பணத்தை புனித் ராஜ்குமார் படிக்க வைத்த மாணவர்களின் கல்விச் செலவுக்கு கொடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.
நாளை நடிகர் விஷால்-ஆர்யா நடிப்பில் ‘எனிமி’ வெளியாகிறது. இதனையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் விஷால் நேற்று திருப்பதி வந்தார். திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக நடந்து சென்ற விஷால் திருமலையில் இரவு தங்கி இருந்து இன்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசிர்வாதம் செய்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் விஷால் ”
”நான்கு ஆண்டுகளாக ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். தற்போது மலைப்பாதையில் பாத யாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்தது மனதில் உள்ள சுமை இறங்கியது போல் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பண்டிகைக் காலங்களில் திரைப்படங்கள் வெளியிட முடியாமல் இருந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி எனது ’எனிமி’ திரைப்படம் வெளியாவது மகிழ்ச்சியளிக்கிறது.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உயிரிழப்பு குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அவர் எத்தனையோ பல நல்ல பணிகளை முன்னெடுத்து செய்துள்ளார் . அவர் செய்ததில் ஒன்றை நான் தொடர முடிவு செய்தேன். எனவே, புனித் ராஜ்குமார் மூலம் படித்து வந்த பிள்ளைகளின் கல்வி செலவை நான் ஏற்பதாக தெரிவித்துள்ளேன். வீடு கட்டுவதற்காக பணம் வைத்திருந்தேன் இருப்பினும் தற்போது இல்லாவிட்டாலும் அடுத்த ஆண்டு நான் வீடு கட்டிக் கொள்வேன். முதலில் குழந்தைகளின் படிப்பு முக்கியம். நடிகர் புனித் ராஜ்குமார் செய்த சேவையில் ஒன்றை நான் தொடர விரும்புகிறேன் அதனை செய்த பின்னர் மேலும் நான் பேசுகிறேன்” என்று கூறினார்.
மேலும், நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவான ரோஜாவும் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருடன் விஷால் திருப்பதியில் இருக்கும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்