[X] Close

”இது பிரகாஷ் ராஜ் தீபாவளி”- ஒரே நேரத்தில் மூன்று படங்கள் வெளியீடு

சினிமா

Actor-Prakash-Raj-releases-three-films-simultaneously-for-diwali

ஒரே நேரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜின் மூன்று படங்கள் தீபாவளிக்கு வெளியாகின்றன.

 ஹீரோ… வில்லன்… உறுதுணை நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்திறமைக் கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎஃப் 2’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, வெற்றிமாறனின் ‘விடுதலை’, அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ’திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்டப் படங்களில் செம்ம பிஸியாக நடித்து வருகிறார். மேலும், பல வருடங்களுக்குப் பிறகு ‘விஜய் 66’ படத்திலும் நடிக்க விஜய்யுடன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

image


Advertisement

 தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்து வரும் பிரகாஷ் ராஜுக்கு இந்த தீபாவளி பிரகாசமான தீபாவளிதான். காரணம், தமிழில் மட்டுமே மூன்று படங்கள் வெளியாகின்றன. தீபாவளியையொட்டி நேற்று  வெளியாகியுள்ள ‘ஜெய் பீம்’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து கவனம் ஈர்த்துள்ளார். அதேபோல, சிறுத்தை சிவாவின் ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிக்கு டஃப் ஃபைட் கொடுக்கும் வில்லனாக மிரட்டியிருக்கிறார். அதேபோல, விஷாலின் ‘எனிமி’ படத்திலும் உறுதுணை கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். ‘அண்ணாத்த’, ‘எனிமி’ நாளை வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

image

மூன்று படங்களும் வெளியாவதால் இது ‘பிரகாஷ் ராஜ் தீபாவளி’ என்று ரசிகர்கள் மீம்ஸ்களில் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close