Published : 02,Nov 2021 10:22 PM

காலநிலை மாற்ற ஐ.நா மாநாட்டில் தூங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்? - வைரலாகும் வீடியோ

Does-US-President-Joe-Biden-fall-asleep-during-the-UN-conference-on-climate-change-COP26

இங்கிலாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு கடந்த அக்டோபர் 31 முதல் நடைபெற்று வருகிறது. சுமார் 200 நாடுகளில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ என உலக நாடுகளின் பிரபல தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர். 

image

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த மாநாட்டு நிகழ்வில் தூங்கிக் கொண்டிருப்பது மாதிரியான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. 

அந்த வீடியோவில் காலநிலை மாற்றம் தொடர்பாக யாரோ ஒருவர் பேசிக் கொண்டிருக்க அதிபர் பைடன் தனது இருக்கையில் அமர்ந்தபடி கேட்டுக் கொண்டிருக்கிறார். இடையில் சில நொடிகள் அவர் கண்களை மூடிக் கொண்டிருக்கிறார். அப்போது அவரது உதவியாளர் ஒருவர் குறிக்கிட்டு பேசுகிறார். பின்னதாக அந்த பேச்சாளர் உரையை முடிக்க அனைவருடனும் சேர்ந்து கர ஒலி எழுப்புகிறார் பைடன். 

ஒரு நிமிடம் மற்றும் 19 நொடிகள் நேரம் கொண்ட இந்த வீடியோவில் அதிபர் பைடன் மொத்தமாக மூன்று முறை கண்களை மூடி திறக்கிறார். மூன்றாவது முறையின் போது தான் உதவியாளர் குறுக்கிட்டு பேசுகிறார். 

இது தொடர்பான விவாதம் தற்போது இணையவெளியில் எழுந்துள்ளதை பார்க்க முடிகிறது. சிலர் பைடனுக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் அவரது வயதை மேற்கோள் காட்டி 2020 அதிபர் தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்ன வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர். அவர் தூங்கினாரா அல்லது கண்களை மூடியபடி பேச்சாளரின் உரையை கேட்டாரா? என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்