"முகமது யூனுஸ் சாலைவிதிகளை முறையாக பின்பற்றுபவர்"-விபத்தில் இறந்தவரின் உறவினர்கள் உருக்கம்

"முகமது யூனுஸ் சாலைவிதிகளை முறையாக பின்பற்றுபவர்"-விபத்தில் இறந்தவரின் உறவினர்கள் உருக்கம்
"முகமது யூனுஸ் சாலைவிதிகளை முறையாக பின்பற்றுபவர்"-விபத்தில் இறந்தவரின் உறவினர்கள் உருக்கம்

சாலைவிபத்தில் இறந்த முகமது யூனுஸ் சாலை விதிகளை முறையாக பின்பற்றுபவர் என அவரது உறவினர்கள் வருத்தம் தெரித்தனர். 

சென்னை ராமாபுரத்தில் வசித்து வந்த முகமது யூனுஸ், இரு சக்கர வாகனத்தில் சின்னமலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் இருந்த பள்ளத்தால் நிலைதடுமாறி தவறி விழுந்த அவர்மீது அரசுப் பேருந்து ஏறி விபத்து நேர்ந்தது. அதில் முகமது யூனுஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அவரை பற்றி நினைவுகூர்ந்த அவரது உறவினர்கள், முகமது யூனுஸ் பி.எஸ்.சி (bsc) பட்டப்படிப்பு முடித்து தற்போது தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறினர். மேலும் அவருக்கு திருமணமாகி ஒருசில வருடங்களே ஆகிய நிலையில் விபத்தில் உயிரிழந்தது குடும்பத்தை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தனர்.

சாலை விதிகளை முறையாக பின்பற்றி வந்த முகமது யூனுஸ் விபத்தில் சிக்கியபோதும் தலைக்கவசம் அணிந்திருந்ததாக கூறும் அவர்கள் அன்பு மகனை இழந்து தவிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். இனி இதுபோன்ற சம்பவம் இனி நடவுபெறாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com