Published : 19,Aug 2017 04:12 PM
பாலச்சந்திரனை கொன்றது இலங்கை ராணுவம்? முன்னாள் தூதர் எரிக் சொல்ஹெய்ம் சந்தேகம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார் என தான் நம்புவதாக இலங்கைக்கான நார்வே முன்னாள் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன் பிரபாகரன் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பது தனக்குத் தெரியாது எனவும் பதிலளித்துள்ளார். 12 வயதான பாலச்சந்திரன் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டதாகவே நம்புவதாகவும், இது மோசமான பொறுப்பற்ற, தீய செயல் எனக் கூறியுள்ள அவர், இலங்கை ராணுவத்தினர் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டது துரதிர்ஷ்டம் எனவும் தெரிவித்துள்ளார்.