சென்னையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றின் பதிவேட்டில் மாணவர்களை சாதி ரீதியாக பிரித்து குறிப்பிடப்பட்டிருந்த விவகாரம் சர்ச்சையை எழுப்பிய நிலையில் அரசின் சலுகைகளை எளிதாக வழங்கவே அவ்வாறு செய்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை எம்ஜிஆர் நகர் கோவிந்தசாமி தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நேற்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் மாணவர்களை சாதி ரீதியாக பிரித்து சுழற்சி முறையில் வகுப்புகளுக்கு வரவழைக்க பள்ளி நிர்வாகம் திட்டமிட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த குற்றச்சாட்டு குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் விளக்கம் தர சென்னை மாநகர இணை ஆணையர் சினேகா உத்தரவிட்டிருந்தார்.
பட்டியலின மாணவர்களுக்கு அரசின் சலுகைகளை எளிதாக வழங்கவே சாதி ரீதியாக பிரித்து அவர்கள் பெயர்கள் பதிவேட்டில் எழுதப்பட்டதாக தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி விளக்கம் அளித்துள்ளார். தற்போது மாணவர்களின் பெயர்கள் ஆங்கில அகர வரிசைப்படி பதிவேட்டில் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சாதி ரீதியில் பிரித்து மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கும் திட்டம் எதுவும் தங்களிடம் இல்லை என்றும் தலைமை ஆசிரியர் தன் விளக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதனைப்படிக்க...திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!