[X] Close

தூத்துக்குடி: பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது

குற்றம்

Thoothukudi-A-youth-was-arrested-in-Pokcho-for-sexually-abusing-a-school-student

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திருமண ஆசைகாட்டி பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள பந்தல்குடி, சூரன் நாயக்கன்பட்டி தெருவைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் தாமரைச் செல்வன் (23). இவர், 16 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் கொடுமை செய்துள்ளார்.

image


Advertisement

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கலா விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாமரை செல்வத்தை கைது செய்தார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close