தமிழகம் பல்வேறு முக்கிய பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளபோது, அதிமுக இணைப்பு விவகாரத்தை தாம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இரு அணிகள் இணைப்பு ஒரு பிரச்னையே இல்லை. இது நாட்டின் பெரிய பிரச்னையா? மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டக்கூடாது என போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் ஒப்புதல் அளித்திருக்கிறார் என்கிற செய்தி பேரதிர்ச்சியாக இருக்கிறது. பவானி ஆற்றில் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளைக் கட்டிக் கொண்டே வருகிறது. எல்லா பக்கமும் தமிழகத்திற்கான நதி நீர் உரிமைகளை அண்டை மாநிலங்கள் பறித்து வருகின்றன.
ஒரு பாலைவனமாக தமிழகம் மாறி வருகிறது. அதிலிருந்து மீட்பது எப்படி? காப்பது எப்படி? என்கிற சிந்தனையோ, செயல்வடிவமோ எதுவும் இல்லை. இந்த நிலையில் இந்த அணிகள் இணைந்தால் என்ன? இணையாவிட்டால் என்ன? பல மாதங்களாக இந்தப்பிரச்னைகள் போய்க்கொண்டு இருக்கின்றன. இதனை நான் வெறுக்கிறேன்’ என தெரிவித்தார்.
Loading More post
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் வெங்கையா நாயுடு
‘கொல்கத்தா புறப்படுகிறேன்’- கொண்டாட்டத்தில் விராட் கோலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!