தமிழக அரசின் தரிசு நில மேம்பாட்டு திட்டம்....ரூ. 802 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசின் தரிசு நில மேம்பாட்டு திட்டம்....ரூ. 802 கோடி ஒதுக்கீடு
தமிழக அரசின் தரிசு நில மேம்பாட்டு திட்டம்....ரூ. 802 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசின் தரிசு நில மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதோடு அதற்கு ரூ. 802 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

தரிசு நிலத்தில் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்வதற்கான திட்டத்தை செயல்படுத்த, மூன்று ஆண்டுகளுக்கு 802 கோடி ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த மானாவாரி கிராம விவசாயிகள் மேம்பாட்டு குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரிசு நிலங்களை கண்டறிந்து தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் 3 ஆண்டுகளில் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கையில் தரிசு நில மேம்ம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தரிசு நிலத்தில் எண்ணெய் வித்துக்கள், கம்பு, பருப்பு வகைகளை சாகுபடி செய்து தரிசு நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com