
தென் மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும், நாளையும் ஓரிரு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 10 சென்டி மீட்டரும், கலசப்பாக்கம், மணலூர்பேட்டையில் 8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தென் மேற்கு அரபிக்கடலில் பலத்த காற்று வீசும் என்பதால், அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.