
சென்னையில் கோயம்பேடு மற்றும் வேளச்சேரியில் புதிய மேம்பாலங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை வேளச்சேரியில் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தில், ஓரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனால் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என வாகன ஓட்டிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதையடுத்து கோயம்பேட்டில் கட்டிமுடிக்கப்பட்ட மேம்பாலத்தையும் அவர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், 'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியை வரும் 7-ஆம் தேதி வரை மக்கள் இலவசமாக பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வஉசி வாழ்க்கை வரலாறு பற்றிய நகரும் புகைப்பட கண்காட்சி பலரையும் கவர்ந்துள்ளது.