Published : 31,Oct 2021 03:20 PM

உலக நாடுகள் நெருக்கடி எதிரொலி: அதிகரிக்குமா கச்சா எண்ணெய் உற்பத்தி?

கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன.

கச்சா எண்ணெய் வள நாடுகள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென அவற்றுக்கு இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நெருக்கடி தரத் தொடங்கியுள்ளன. இதையடுத்து ஓபெக் எனப்படும் எண்ணெய் வள நாடுகள் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து வரும் 4ஆம் தேதி கூடிப்பேச உள்ளன. தற்போதைய நிலையில் ஒரு நாளைக்கு 4 லட்சம் பீப்பாய்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை உயரும் பட்சத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்து பெட்ரோல், டீசலும் விலை குறையும் நிலை ஏற்படும். இதற்கிடையில் நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலம் கங்காநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 121 ரூபாயை தொட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 120 ரூபாயை தொட்டுள்ளது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 115 ரூபாயையும் தலைநகர் டெல்லியில் 109 ரூபாயையும் எட்டியுள்ளது. சென்னையை பொருத்தவரை பெட்ரோல் விலை 106 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதனைப்படிக்க...பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான அறிவிப்பை உடனே திரும்ப பெறுக : டிடிவி தினகரன் 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்