ஹைதராபாத் சதர்காட் பகுதியில் ஒருவர், பாஜகவினர் பொதுமக்களை துன்புறுத்துகிறார்கள் எனக்கூறி கட்டிடத்தின் மேல் ஏறி குதித்துவிடுவதாக மிரட்டியதால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள ஆர்மூர் மண்டலத்தைச் சேர்ந்த இவர், உள்ளூர் பாஜக நிர்வாகிகள் சில காரணங்களுக்காக பொதுமக்களை துன்புறுத்துவதாக குற்றம் சாட்டினார். முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை எடுத்து வருவதால், அவர் எங்களுக்கு உதவுவார் என்ற நம்பிக்கையில் அவரைச் சந்திக்க காவல்துறை உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
திடீரென அந்த நபர் ஒரு ஐந்து மாடி கட்டிடத்தின் மீது ஏறி, குதித்து விடுவதாக மிரட்டியதால் பெரிய அளவில் கூட்டம் கூடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த தகவலின் பேரில், மிர்சவுக் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, அவரை கீழே இறங்க வைத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதனைப்படிக்க..."மோடி அதிக சக்தி வாய்ந்தவராக இருக்க காரணம் காங்கிரஸ்தான்" - மம்தா பானர்ஜி
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்