’ரோஜா’ சீரியல் அக்‌ஷயாவுக்கு கொரோனா தொற்று உறுதி

’ரோஜா’ சீரியல் அக்‌ஷயாவுக்கு கொரோனா தொற்று உறுதி
’ரோஜா’ சீரியல் அக்‌ஷயாவுக்கு கொரோனா தொற்று உறுதி

சீரியல் நடிகை அக்‌ஷயாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் ’ரோஜா’. நாயகியாக பிரியங்கா நல்காரி, வில்லியாக விஜே அக்‌ஷயா நடித்து வருகின்றனர். டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பால் மிரட்டி வருபவர் விஜே அக்‌ஷயா. இவருக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார்.

அதில்,” எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். ஆனால், நான் கொரோனா தடுப்பூசி போட்டப்பின்பும் துரதிஷ்டவசமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தயவு செய்து வெளியில் செல்வதை தவிருங்கள். மாஸ்க் அணியுங்கள். விரைவில் மீண்டு வருவேன். எனக்காக பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com