[X] Close

திருவாரூர்: கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு குலுக்கல் முறையில் பரிசு

கொரோனா வைரஸ்

People-who-gets-vaccination-are-rewarded-with-prizes-in-Thiruvarur

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக, தடுப்பூசி போட்டுக்கொள்வோர் மத்தியில் குலுக்கல் முறையில் பரிசுகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அங்கே தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களிடம் தகவல்கள் பெறப்பட்டுவருகிறது. 

தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருவதை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் இன்று 500 இடங்களில் 50,000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை இலக்காக கொண்டு மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி: தமிழகம் முழுவதும் 7-வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம்


Advertisement

image

இம்முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டு கொள்பவர்கள் பெயர்கள் குறிப்பு சீட்டில் பதியப்பட்டு, முகாம் முடிவுற்ற பின்பு வட்டார அளவில் அவர்களின் பெயர்களில் குலுக்கல் முறை தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு அதிலிருந்து மூவர் தேர்தெடுக்கப்படும் என்றும்; அந்த மூன்று நபர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்படவுள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடப்படப்படும் அனைத்து முகாம்களிலும் தடுப்பூசி போட்டுக் கொண்டுவர்களின் தகவல்கள் பெறப்பட்டு சேகரிக்கப்பட்டு வருகின்றன. திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தடுப்பு முகாமில் நகராட்சி ஆணையர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் கலந்து கொண்டார்கள்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close