Published : 28,Oct 2021 02:09 PM

'யார் இந்த சூப்பர் மேன், ஸ்பைடர் மேன்?' - பட்டையை கிளப்பும் மின்னல் முரளி டிரெய்லர்

Minnal-Murali-Official-Trailer-released

டோவினோ தாமஸ் நடிக்கும் 'மின்னல் முரளி' மலையாள படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் ஒரு சூப்பர் ஹீரோ படம் எடுத்தால் எப்படியிருக்கும்? அந்த ஏக்கத்தை நிறைவேற்றும் வகையில் உருவாகியிருக்கிறது 'மின்னல் முரளி'. இயக்குநர் பசில் ஜோசப் இயக்கும் மூன்றாவது திரைப்படம் இது. 90களின் பிற்பகுதியில் உருவாகும் இந்த திரைப்படம் சூப்பர் ஹீரோ கதையை மையமாக கொண்டுள்ளது.

மின்னல் தாக்கிய ஒருவர் சூப்பர் ஹீரோவாக மாறுவதை காமெடி கலந்த திரைக்கதையில் உருவாக்கியிருக்கிறார் பசில் ஜோசப். கேரளாவுக்கு சூப்பர் ஹீரோ திரைப்படம் புதிது என்ற போதிலும், டிரெய்லரின் எந்த வித அமேச்சூர் சாயலும் தென்படவில்லை. டோவினோ தாமஸின் கெட்டப்புகள் ஈர்க்கின்றன.

Malayalam superhero film 'Minnal Murali' to release on Dec 24 | Web-series  News – India TV

இதுவரை பார்த்திராத சூப்பர் ஹீரோ அவதாரத்தில் டோவினோ தாமஸ் நடித்துள்ளார். அவருடன் குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் மற்றும் அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டிசம்பர் மாதம் 24ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கில மொழிகளிலும் படத்தை காண முடியும்.

மின்னல் முரளி படம் குறித்து பேசிய இயக்குநர் பசில் ஜோசப், ''காமிக் புத்தகங்கள் தொடங்கி சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் வரை நான் எப்போதும் சூப்பர் ஹீரோ புனைகதைகளின் மிகப்பெரிய ரசிகன்.

பலதரப்பட்ட பார்வையாளர்களை ஈர்க்கும் சிறந்த சூப்பர் ஹீரோ மூலக் கதையை உருவாக்க விரும்பினேன். மின்னல் முரளியின் மூலம் அந்தக் கனவு உயிர்ப்பித்துள்ளது'' என்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்