Published : 28,Oct 2021 02:06 PM

"சேகுவேரா பின்னணியில் விஷால்": கவனம் ஈர்க்கும் ‘வீரமே வாகை சூடும்’ புகைப்படங்கள்

actor-vishal-Veerame-Vaagai-Soodum-movie-photos-release

விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.

நடிகர் விஷால் ‘எனிமி’, ‘வீரமே வாகை சூடும்’ படங்களில் நடித்து முடித்துள்ளார். ‘எனிமி’ வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் நிலையில், ’வீரமே வாகை சூடும்’ படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் து.ப சரவணன் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

image

விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி அறிமுகமாகிறார்.யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடிக்கிறார்கள்.

image

சமீபத்தில், இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிய நிலையில், விஷாலின் படப்பிடிப்புத்தள புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில், சிவப்பு பின்னணியில் சேகுவேரா வரையப்பட்ட சுவற்றில் விஷால் நிற்கும் கவனம் ஈர்க்கும் புகைப்படம் ’வீரமே வாகை சூடும்’ படத்தலைப்பையும் கதையும் குறியீடாய் உணர்த்துகிறது.

image

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்