[X] Close

இந்தியா: நேற்றைவிட சற்று அதிகரிப்பு; புதிதாக 16,156 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ்

India-reports-16156-new-cases-733-deaths-in-the-last-24-hours
இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு 13,451 ஆக இருந்த நிலையில், புதிதாக 16,156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,156 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது (கேரளாவில் மட்டும் 9,445 பேர்). இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,42,31,809 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 733 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,56,386 ஆக உயர்ந்துள்ளது.
 
image
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 17,095 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,36,14,434 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,60,989 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 243 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைவு ஆகும். இந்தியாவில் இதுவரை 1,04,04,99,873 கோடி பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49,09,254 பேர்) கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Related Tags : COVID-19 கொரோனாcoronavirus

Advertisement

Advertisement
[X] Close