
கொரோனா தடுப்பூசி திட்டத்தில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் வீடுவீடாகச் சென்று தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
நாடெங்கும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியை கடந்துள்ள போதும் பல மாவட்டங்கள் இப்பணியில் மிகவும் பின்தங்கியுள்ளன. அப்பகுதிகளில் பொதுமக்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வரும் 2ஆம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு சிறப்பு பரப்புரையை நடத்த மத்திய சுகாதாரத்துறை திட்டமிடடுள்ளது.
வரும் நவம்பர் மாத இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்திய நிலையை ஏற்படுத்த இலக்கு வைத்து செயல்பட உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவத்துள்ளது. இதற்கிடையே நாடெங்கும் இதுவரை 11 கோடி பேர் தவணை காலம் கடந்தும் 2ஆவது தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை என்பது அரசின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.