[X] Close

மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியா

rn-ravi-meet-home-minister-amit-shah

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார்.


Advertisement

தமிழ்நாடு ஆளுநராக கடந்த மாதம் 18ஆம் தேதி பதவியேற்றுக்கொண்ட ஆர்.என்.ரவி 6 நாள் பயணமாக கடந்த 22ஆம் தேதி டெல்லி சென்றார். அப்போது பிரதமர் மோடியை சந்தித்த ஆளுநர் ஆர்.என். ரவி, மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் மக்களின் நலன் குறித்தும் பேசியதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

Governor RN Ravi calls on Amit Shah over Naga peace talk


Advertisement

அப்போது தமிழ்நாட்டிற்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்வதாக பிரதமர் உறுதியளித்துள்ளதாகவும் ஆளுநர் மாளிகை கூறியுள்ளது. பிரதமரை தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த ஆளுநர், நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்ததாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close