[X] Close

டி20 உலகக் கோப்பையில் விளையாடும் இளம் வயது கிரிக்கெட் வீரர்கள்! ஓர் தொகுப்பு

சிறப்புக் களம்

Top-Five-Young-cricketers-playing-in-the-T20-World-Cup-2021-in-UAE-and-Oman

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது சூப்பர் 12 சுற்று விறுவிறுப்பாக உள்ளது. இந்த நிலையில் இந்த தொடரில் விளையாடும் ஐந்து இளம் வயது விளையாட்டு வீரர்கள் குறித்து பார்ப்போம். 

image


Advertisement

ஜான் நிகோல் லோஃப்டி-ஈடன் - 20 வயது மற்றும் 226 நாட்கள்

நமீபியா நாட்டை சேர்ந்த இவர் நடப்பு டி20 கிரிக்கெட் தொடரில் அந்த அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரையில் தனது நாட்டுக்காக 7 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இடது கை பேட்ஸ்மேனான இவர் ரைட் ஆர்ம் லெக் ஸ்பின்னராகவும் பந்து வீசும் திறன் படைத்தவர். 

image


Advertisement

முஜிபுர் ரஹ்மான் - 20 வயது மற்றும் 213 நாட்கள்

ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த இவருக்கு அறிமுகம் அதிகம் தேவைப்படாது. டீன் ஏஜில் இருந்தே சர்வதேச கிரிக்கெட் விளையாடி வரும் இவரது பெயர் உலகளவில் பரிச்சயம். 20 டி20, 43 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி என ஆப்கானிஸ்தான் அணிக்காக இவர் விளையாடி உள்ளார். , 19 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளியிருந்தார். 

image

ஷோரிஃபுல் இஸ்லாம் - 20 வயது மற்றும் 146 நாட்கள்

குட்டிப்புலி கூட்டமான வங்கதேச கிரிக்கெட் அணியின் இளம் இடது கை பவுலர் தான் ஷோரிஃபுல் இஸ்லாம். 12 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள இவர் மொத்தம் 18 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். நடப்பு தொடரில் அவர் கைப்பற்றியுள்ள ஒரே விக்கெட் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராயின் விக்கெட் தான். 

image

முகமது வாசிம் - 20 வயது மற்றும் 63 நாட்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் ஆல்-ரவுண்டர் தான் முகமது வாசிம். இதுவரையில் பாகிஸ்தான் அணிக்காக நான்கு டி20 போட்டிகளில் விளையாடி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு அமையலாம். அந்த வாய்ப்பு கிடைத்தால் தனது திறனை நிரூபிக்க காத்துள்ளார் இந்த மிதவேகப்பந்து வீச்சாளர். 

image

ரஹ்மானுல்லா குர்பாஸ் - 19 வயது மற்றும் 333 நாட்கள்

ஆப்கானிஸ்தான் நாட்டின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரஹ்மானுல்லா குர்பாஸ் தான் இந்த தொடரில் விளையாடும் மிகவும் இளம் வயது வீரராக உள்ளார். நடப்பு டி20 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான மேட்ச் வின்னிங் நாக் ஆடி அசத்தியிருந்தார். கடந்த 2019 முதல் இதுவரையில் ஆப்கன் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் 14 இன்னிங்ஸ் விளையாடி உள்ளார் இவர். டி20 கிரிக்கெட்டில் இவரது அதிகபட்ச ரன்கள் 87 ஆகும். 


Advertisement

Advertisement
[X] Close