[X] Close

”அந்த ஏரியா ஆளுக்கு வேல கொடுக்கமாட்டோம்யா”: கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் ‘ஜெயில்’ டீசர்

சினிமா

director-vasanthabalan-and-jv-prakash-jail-teaser-release

இயக்குநர் வசந்தபாலன் இயக்கியுள்ள ‘ஜெயில்’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

’வெயில்’, ‘அங்காடித்தெரு’, ‘அரவான்’, காவியத்தலைவன்’ என சிலப் படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் தமிழில் கொண்டாடப்படும் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராகப் பார்க்கப்படும் இயக்குநர் வசந்தபாலன் ஜி.வி பிரகாஷ் நடிப்பில்‘ஜெயில்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். ஜி.வி பிரகாஷுக்கு ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரண்டு வருடங்களாக வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் இப்படத்தின் உரிமையை சமீபத்தில்தான் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் கைப்பற்றியிருந்தது.


Advertisement

இந்த நிலையில், தற்போது ‘டீசர்’ வெளியாகி இருக்கிறது. இதனை நடிகர் தனுஷ் வெளியிட்டிருக்கிறார். சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுக்கிறோம் என்றுக்கூறி கூவம் ஆற்றங்கரையோம் வசித்த மக்களை துரைப்பாக்கம் அருகேயுள்ள கண்ணகி நகருக்கு அப்புறப்படுத்திய அரசை கேள்வி கேட்கிறது ‘ஜெயில்’ டீசர். அதோடு, அப்பகுதி மக்கள் மீது தொடர்ச்சியாக கேஸ்களை குவிக்கும் காவல்துறையினர், ‘கண்ணகி நகர்’ பகுதி மக்கள் என்பதற்காக வேலை கொடுக்காத அவலம் என ஒரே டீசரில் அத்தனையையும் கண்முன் நிறுத்தி கவனம் ஈர்த்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.

இதற்கு முன்பாக, ஜெயில் படத்தில் இடம்பெற்ற காத்தோடு காத்தானன் பாடல் மெகா ஹிட் அடித்து இன்றளவும் பலரது பேவரட் பாடலாக உள்ளது. தனுஷ் மற்றும் அதிதி அந்த பாடலை பாடியிருந்தார்கள். 


Advertisement

Advertisement
[X] Close