ஆவின் இனிப்புக்கு வரவேற்பு - 26 நாட்களில் ரூ.22 கோடிக்கு இனிப்புகள் விற்பனை

ஆவின் இனிப்புக்கு வரவேற்பு - 26 நாட்களில் ரூ.22 கோடிக்கு இனிப்புகள் விற்பனை
ஆவின் இனிப்புக்கு வரவேற்பு - 26 நாட்களில் ரூ.22 கோடிக்கு இனிப்புகள் விற்பனை

ஆவின் மூலம் கடந்த 26 நாட்களில் சுமார் 22 கோடி ரூபாய்க்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு ஆவின் இனிப்புகளையே கொள்முதல் செய்யுமாறு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் ஆவின் விற்பனையை அதிகரிக்க இந்த ஆண்டு புதிய வகை இனிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஒன்றாம் தேதி முதல் நேற்று வரை 22 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு ஆவின் இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்துத்துறை சார்பில் மூன்று கோடி ரூபாய்க்கு 70 டன் இனிப்புகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஆவின் மூலம் 19 கோடி ரூபாய்க்கு மட்டுமே இனிப்புகள் விற்பனையாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே 22 கோடி ரூபாய்க்கு இனிப்புகள் விற்பனையாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com