[X] Close

விரைவில் புது 50 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி

New-Rs-50-note-to-hit-market-soon

புதிய 50 ரூபாய் தாள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

புதிய 50 ரூபாய் நோட்டுகள் வெளிவர இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இதுபற்றி ரிசர்வ் வங்கி எதுவும் கருத்துத் தெரிவிக்காமல் இருந்ததால் இது உண்மையான தகவல்தானா என்பதில் குழப்பம் இருந்தது. இந்நிலையில் புதிய 50 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஹம்பி வரலாற்றுச் சின்னத்தின் படத்தைக் கொண்டதாக புதிய ரூபாய் தாள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் பாரம்பரிய பெருமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. பழைய 50 ரூபாய் தாள்களும் தொடர்ந்து செல்லத்தக்கவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close