[X] Close

சென்னையில் அதிக மழை !

Rain-in-Chennai

காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறும்போது, ‘தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக சோளிங்கரில் 8 செ.மீ.மழை பெய்துள்ளது.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இன்று மாலை முதல் படிப்படியாக மழையின் அளவு குறையும்.


Advertisement

சென்னையில் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி வரை பெய்யவேண்டிய இயல்பான மழை 25 செ.மீ., ஆனால் 32 செ.மீ.மழை பெய்துள்ளது. அதாவது 28 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. சென்னையில் இன்று மாலை அல்லது இரவுநேரத்தில் சில பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்யும்’ என்று தெரிவித்துள்ளார்.
 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close