Published : 19,Aug 2017 02:01 AM

பத்ம விருதுக்கு மக்களே பரிந்துரைக்கலாம்

Anyone-can-nominate-any-person-for-Padma-awards-till-September-15

மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு தகுதியுள்ளோரின் பெயர்களை மக்களே பரிந்துரைக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

www.padmaawards.gov.in என்ற வலைத்தளத்தில் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை பரிந்துரைகளை அனுப்பலாம் என அரசு தெரிவித்துள்ளது. கலை,
இலக்கியம், கல்வி, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், வணிகம், தொழிற்துறை, பொது விவகாரங்கள், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் மிகச்சிறந்த வகையில் பணியாற்றியவர்களை பொது மக்கள் பரிந்துரைக்கலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

பத்ம விருதுகள் இதுவரை அமைச்சர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோரி்ன் பரிந்துரையின் பேரிலேயே வழங்கப்பட்டு வந்ததாகவும் இனி மக்களின் பரிந்துரைகளும் பரிசீலிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்