Published : 27,Oct 2021 08:14 AM
"நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடத்தப்படும்" - மாநில தேர்தல் ஆணையர்
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் சுதந்தரமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறக்கூடிய பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிக்கான நகர்புற தேர்தலை நடத்துவது தொடர்பாக மதுரையில் மண்டல அளவில் தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய மாநில தேர்தல் ஆணையர், ஒலிம்பிக் போட்டியில் ஓடுவது போல் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.