
பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த பேரறிவாளன், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த மே மாதம் பரோல் வழங்கப்பட்டது. தொடர்ந்து கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் ஆகிய பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு இதுவரை 4 முறை பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த பரோல் இன்றோடு நிறைவடைந்த நிலையில், மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது 5ஆவது முறையாக பேரறிவாளனுக்கு மீண்டும் பரோல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.