Published : 26,Oct 2021 07:53 PM

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்’

actor-Vikram-PrabhuTaanakkaran-goes-for-a-Direct-OTT-Release

விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்’ நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த தமிழ் இயக்கத்தில் ‘டாணாக்காரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம் பிரபு. முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். காவல்துறை கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் நடிகர் லால், எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். அஞ்சலி நாயர் ஹீரோயினாக நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘டாணாக்காரன்’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதற்கான, அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்