”அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா எனது படத்தில் அறிமுகமானதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று உற்சாகமுடன் தெரிவித்திருக்கிறார் நடிகை சமந்தா.
நடிகை சமந்தா தெலுங்கில் ‘சகுந்தலம்’ படத்தில் நடித்து வருகிறார். ‘ருத்ரமாதேவி’ படத்தை இயக்கிய தெலுங்கின் பிரபல இயக்குநர் குணசேகர், மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு ‘சகுந்தலம்’ படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தில்தான், தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.
முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் அல்லு அர்ஹா இந்தப்படத்திற்காக 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.அல்லு அர்ஹா நடித்தது குறித்து நடிகை சமந்தா அளித்துள்ளப் பேட்டியில்
“அவள் ஒரு ராக்ஸ்டாராக பிறந்தவள். படப்பிடிப்பில் 300-க்கும் மேற்பட்டோர் இருந்தபோதும் அல்லு அர்ஹா பயப்படடாமல் தன்னம்பிக்கையுடன் இருந்தாள். தெலுங்கு மொழியை பிரமாதமாக பேசுகிறாள். என்னுடைய படத்தில் அறிமுகமாவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், பல வருடங்கள் கழித்து அவள் சினிமாவை உலுக்கப்போகிறாள். படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் என்னுடன் உடன்படுவீர்கள்” என்று கூறியிருக்கிறார்.
Loading More post
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
குடிநீரில் கலந்த கழிவுநீர்; மீனவ கிராமத்தை சேர்ந்த 11க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
பிரதமர் வருகையின்போது சந்தேகத்திற்கிடமாக பேசிய மாணவர்கள்; விசாரித்து அனுப்பிவைப்பு
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!